ரசப் பொடி

தேவையான பொருட்கள்:

  •  
  • கொத்துமல்லி விதை – 200 கிராம்
  • துவரம்பருப்பு – 100 கிராம்
  • மிளகு – 50 கிராம்
  • சீரகம் – 100 கிராம்
  • பெருங்காயத்தூள் – 25 கிராம்
  • மிளகாய்வத்தல் – 150 கிராம்
  • கொள்ளு (Horse gram) – 50 கிராம்
  • பூண்டு – 15 பல்
  • மஞ்சள்தூள் – 25 கிராம்
  • வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை – 5 ஆர்க்கு
  • எண்ணெய் – சிறிது (வறுப்பதற்கு)
  • உப்பு – 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 கொத்துமல்லியைக் கல், குப்பை இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்.மிளகாய் வத்தலைக் காம்பு கிள்ளி வைத்துக்கொள்ளவும்.பூண்டைத் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் (எண்ணெய் விடாமல் வறுக்க வேண்டியவற்றை முதலில் வறுத்துக் கொள்ளவும்.)அடுப்பில் வாணலியை வைத்துச் சூடேற்றவும். எண்ணெய் விடாமல் மஞ்சள்தூளை இளஞ்சூட்டில் வறுத்து தனியே வைக்கவும்.வெந்தயத்தையும் இதே போல் எண்ணெய் விடாமல் வறுத்து தனியே வைக்கவும்.அடுத்ததாக வாணலியில் உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலையை ஒன்றாகச் சேர்த்து மிதமான தணலில் வைத்து சில நிமிடங்கள் வறுக்கவும்.கறிவேப்பிலை நல்ல மொறுமொறுப்புத் தன்மையுடன் ஒடிக்க வரும் அளவுக்கு வறுத்து இவற்றைத் தனியே எடுத்து வைக்கவும்.மிளகு, சீரகத்தை எண்ணெய் விடாமல் வாணலியில் ஒன்றாகச் சேர்த்து வறுக்கவும். சீரகம் நன்றாகப் பொரியும்படி வறுத்துத் தனியே வைக்கவும்.வாணலியில் சில துளிகள் (மிகக் குறைந்த அளவு) எண்ணெய் விட்டு கொத்துமல்லியைச் சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும்.வாணலியில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டையும், மிளகாய் வத்தலையும் சேர்த்து சில நிமிடங்கள் லேசாக வதக்கவும். பின் தனியே எடுத்து வைக்கவும்.துவரம்பருப்பையும், கொள்ளையும் தனித்தனியே சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.இதுவரை வறுத்த எல்லா பொருட்களையும், தட்டில் பரப்பி நன்றாக ஆற விடவும்.நன்றாக ஆறியபின் மிக்சியில்/மாவு அரைக்கும் மில்லில் கொடுத்து நைஸான பொடியாக அரைத்துக் கொள்ளவும்.ரசப் பொடியை நன்றாக ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பாக்களில் வைத்திருந்து பயன்படுத்தவும்.ரசத்திற்கு தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம் என அரைக்கும் போது இந்த ரசப்பொடியையும் 1 டீ ஸ்பூன் அளவு சேர்த்து அரைத்து ரசம் வைத்தால், ரசம் நல்ல சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s