பெரியவா -1

பெரியவா ஒரு நாள், மத்யான்னம் வரைக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு வந்திருந்த எல்லோருக்கும் தர்ஶனம் குடுத்துக் கொண்டிருந்தார்.

ஏக கூட்டம். கடைசியில் ஒரு வயஸான பாட்டி நின்று கொண்டிருந்தாள். பெரியவாளின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினாள்.

“ஒனக்கென்ன வேணும்? கேளு…..”

தன்னுடைய பரம பக்தை என்று தெரியும். சிரித்துக் கொண்டே அந்த பாட்டியை கிண்டினார்.

“நேக்கு இனிமே என்ன வேணும்? ஸதா ஸர்வ காலமும் பெரியவாளை ஆராதிச்சிண்டே இருந்தா…. அது ஒண்ணே போறும்……….”

“அதான் இருக்கே!…………கொறையே இல்லாம பண்றியே! இப்போ, இந்த க்ஷணம் ஒனக்கு ஏதாவது ஆசை இருக்கா? சொல்லு…..”

முகத்திலோ ஒரு வகையான, புன்சிரிப்பு!

சுற்றி இருந்தவர்களோ…..” பெரியவா இன்னிக்கி இந்தப் பாட்டியை ஏன் இப்படி கொடையறார்?” என்று புரியாமல் முழித்தனர்.

பெரியவா அப்படி சொன்னதும் பாட்டி கொஞ்சம் தயங்கினாள்………..

விடுமா என்ன இந்த விளையாட்டுக் குழந்தை ?

இன்று அந்த பாட்டி வாயைக் கிண்டி கிளறி ஏதோ ஹிமாலய விஷயத்தை, தூஸி மாதிரி உலகுக்கு காட்டும் திருவிளையாடல் அரங்கேற வேண்டாமா?

“சொல்லு…….பரவாயில்லே…ஏதோ, என்னால முடிஞ்ச அளவு ஒதவி பண்றேன்…..”
( அம்மாடியோவ்! ‘முடிஞ்ச அளவு’ ஒதவி பண்றாறாமே!)

“பெரியவாகிட்ட சொல்லணுன்னு ரொம்ப ஆசைதான்…..”

“சொல்லு….சொல்லு….”

“நேக்கு ஒரே ஒரு ஆசை……..இந்த உஸுர் போறதுக்குள்ளே ஒரே ஒரு தடவை பத்ரி நாராயணனை பாக்கணும்………”

மெதுவான குரலில் தயங்கி தயங்கி சொன்னாள்.

வந்தியா? வழிக்கு!….இதற்காகவே காத்திருந்தவர் போல் பலமாக சிரித்தார்…….

ஆனால் அடுத்த க்ஷணம், ஒப்புமையில்லாத தன்னைத்தானே காட்டிக் கொண்டு, வகையாக மாட்டிக் கொண்டார்!

“நீதான் ஒனக்கு எதிர்லயே பாத்துண்டுதானே இருக்கே?”……..

“எதிர்லயா? எதிர்ல பெரியவா நீங்கதானே இருக்கேள்? பத்ரி நாராயணன் எங்க?

“என்ன ஸந்தேஹமா?……….

[ஹிமாலய உண்மை திறந்தது]

“எனக்கு மேலே பாரு……இது என்ன மரம்?”

“எலந்தை மரம்”

“ஸம்ஸ்க்ருதத்ல, எலந்தைக்குத்தான் பதரி….ன்னு பேரு. தெரியுமோ?”

“நாராயணா! நாராயணா!”

லேட்டாக புரிந்து கொண்ட பாட்டியும், சுற்றி இருந்தவர்களும் பேச்சு எழாமல், கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

ஆம். பதரி மரத்தின் கீழே இருக்கும் நாராயணன் நானே! என்று பட்டவர்தனமாக பெரியவா திருவாக்கில் வந்ததை நேரில் கேட்க என்ன புண்ணியம் செய்தனரோ?

எப்பேர்ப்பட்ட அவதாரபுருஷரிடம் இருந்தாலும், ப்ரத்யக்ஷமான அவரை விட, இன்னும் வேறு தெய்வ வடிவங்களை நேரிலோ, யோகத்தாலோ, கோவில்களிலோ காண்பதுதான் உத்தம பக்த லக்ஷணம் என்ற எண்ணம் ஏன் வரவேண்டும்? க்ருஷ்ணனையோ, ராமனையோ, அம்பாளையோ நேரில் தர்ஶனம் பண்ணினால் அவர்களுக்கு மேல் உள்ள யாரையாவது தர்ஶனம் பண்ண வேண்டுமென்று ஆசைப்படுவோமா?

‘உள்ளங்கை நெல்லிக்கனி’ என்பதை விட, உள்ளங்கை என்ன? ரெண்டு கையும் கொள்ளாத அளவு, நல்ல மணக்க மணக்க பெருமாளுக்கு நிவேதித்த ‘படா படா ஸைஸ்’ திருப்பதி லட்டே, நம்மிடையே இன்றும் வாழ்ந்து, நம்முடன் பேசி, உபதேஸித்துக் கொண்டு, அனுக்ரஹம் பண்ணிக் கொண்டிருக்கும் போது, அதை விட்டுட்டு, வேற எதைத் தேடி இன்னும் அலைந்து கொண்டிருக்கிறோம்? அது ஸந்தோஷப்படும்படி நாம் வாழ்ந்தாலே போறுமே!

பெரியவா போன்ற உத்தம குருவை அடைந்தவர்களுக்கு, ஸாக்ஷாத் பகவானே நேரில் வந்து தர்ஶனம் குடுத்தால் கூட குரு ஸேவையால், ஸ்மரணையால், அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு, பகவானைக்கூட இணையாக நினைக்க மாட்டார்கள்.

பண்டரீபுரத்தில் வாழ்ந்த ‘ஸந்த் ஏக்நாத்’, தன்னுடைய குருவான ஸ்ரீ ஜனார்தன ஸ்வாமிக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 12 வர்ஷம், அப்படியொரு கைங்கர்யம் பண்ணிவந்தார். குரு மூலம் மந்த்ரோபதேஸம் கூட ஆகவில்லை. இவருடைய அன்பைக் கண்ட குரு, ஸாக்ஷாத் தத்தாத்ரேயரை அழைத்து, ஏகநாதருக்கு தர்ஶனம் குடுக்கச் சொல்லி ப்ரார்த்தனை பண்ணினார். அவ்வாறே, ஒருநாள், ஏகநாதர் குளித்துவிட்டு வரும்வழியில், ஒரு மரத்தடியில் தத்தாத்ரேயர் அவருக்கு தர்ஶனம் குடுத்ததும், ஏகநாத் அவரை நமஸ்காரம் பண்ணிவிட்டு, ஸாதாரணமாக, நேராக குருவின் குடிலுக்கு வந்து எப்போதும்போல் தன் கைங்கர்யங்களை பண்ண ஆரம்பித்தார்.

ஜனார்தன ஸ்வாமியோ தன் ஶிஷ்யன், தத்தாத்ரேயரை பார்த்து விட்டு வந்து பக்தியில் மயங்கி மயங்கி விழுவான், அரற்றுவான், அவனை எப்படியெல்லாம் ஸமாதானப் படுத்தவேண்டும் என்பது போலெல்லாம் மனஸில் ஒத்திகை பார்த்துக் கொண்டு ஶிஷ்யனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

ஸாயங்காலம் ஆச்சு! ஏகநாதரோ, தத்தாத்ரேயரைப்பற்றி வாயைத் திறக்கக் காணோம்! குருவுக்கு தாங்கவில்லை. கேட்டுவிட்டார்……

“காலைல என்ன பார்த்தே?”

“தத்தாத்ரேயரை பார்த்தேன்………”

“என்னடா? இப்படி ஸாதாரணமா சொல்றே? ஸாக்ஷாத் பகவானை பார்த்திருக்கியே!”

“நான் அதுக்கெல்லாம் ஆசையே படலியே! என்னோட குருவும், பகவானுமான உங்களைத்தவிர, உங்களுக்கு ஸேவை பண்றதைத் தவிர எனக்கு வேற பாக்யம் என்ன இருக்கு?”

இது உண்மையிலேயே உத்தமமான குருவை அடைந்து அவருக்கருகில் இருந்து ஸேவை கூட பண்ண வேண்டாம். அப்பேர்ப்பட்ட குருவின் ஸ்மரணை மட்டுமே போதுமானது. இது ஒரு அனுபவம் மட்டுமே!

நாமும் தினமும் பெரியவாளை ஸ்மரணம் பண்ணும் பாக்யமே, “அந்த திருப்பதியின் திவ்யலட்டு” நமக்குப் பண்ணும், மஹா மஹா அனுக்ரஹம்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s