தினம் ஒரு பாகவத தரிசனமும் ஒரு நாமாவளியும்.

இன்றய பாகவதர் ….. ஶ்ரீமதி விசாகா ஹரி

இன்றய நாமாவளி …..

கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

வசுதேவ தவ பாலா
அசுர குல காலா
சசிவதன ரூபிணி
சத்யபாம லோலா

கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

கொத்தோட வாழை மரம்
கொண்டு வந்து நிறுத்தி
கோப்புடைய பந்தலுக்கு
மேல் கட்டு கட்டி

கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே

மையலாய் தையலாள்
மாமலர் கரத்தினால்

மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பில

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே

ஸ்ரீராமனும் மணமகன் ஆனாரே

நம்ம ஜானகி மணமகள் ஆனாளே

வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்

சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்

Smt.Vishaka Hari